All India Anna Dravida Munnetra Kazhagam

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மத்திய அரசின் ஒரு அமைப்பே நடத்திய ஆய்வின்படி ஒட்டுமொத்த இந்தியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெறுகின்றன. ஒரு நாளுக்கு 60 போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. அதே சமயத்தில், காவல்துறையினர் தடியடி பிரயோகம் நடத்துவதோ அல்லது கண்ணீர் புகை பயன்படுத்துவதோ ஒட்டுமொத்த இந்தியாவில் 0.5 சதவீதம் மட்டும் தான். மாண்புமிகு உறுப்பினர் திரு. சவுந்தரராசன் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால் அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளை காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும், காவல்துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்குகின்றன என்றுதான் பொருள்.