All India Anna Dravida Munnetra Kazhagam

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே கூறுகிறார். அது தவறான கூற்று. 2011-ல் இந்த அரசு பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற Custodial Death அதாவது காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது நிகழ்ந்த மரணங்கள் நான்கு, 2012-ல் ஆறு, 2013-ல் பதினைந்து, 2014-ல் எட்டு, 2015-ஆம் ஆண்டில், இந்த ஆண்டில் வெறும் 3 மரணங்கள் தான் நடயந்ள்ளன. இதுகூட வருத்தத்திற்குரிய விஷயம் தான். ஆனால் இந்த மரணங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது போன்ற சம்பவங்களும் நிகழாமல் இருக்க தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.