புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2016
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை

புதுச்சேரி, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நான்கு பிராந்தியங்களைக் கொண்ட ஒரு யூனியன் பிரதேசம். பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு அறிவு சார்ந்த இடமாகவும் புதுச்சேரி பிரதேசம் விளங்குகிறது. இங்கே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் இருந்த போதும் இதன் ஆளுமை, மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கும், அதிகார வரம்பிற்கும் உட்பட்டதாக உள்ளது. புதுச்சேரியின் மக்கள் ஒரு நிர்வாகத் திறமை உள்ள, துடிப்புள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கும் ஒரு மாற்று அரசு வேண்டும் என்ற ஆவலில் இருக்கின்றனர். மிகக் குறிப்பாக, தமிழகத்தில் பொற்கால ஆட்சியைக் கொடுத்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, புதுச்சேரியிலும் மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் புதுச்சேரி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். புதுச்சேரியின் தற்போதைய மக்கள் பிரச்சனைகளையும், மாநிலப் பிரச்சனைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதுடன், புதுச்சேரியில் சமூக நீதியோடு கூடிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும், மாநிலத்தின் தனி நபர் வருவாயை இரட்டிப்பாக்கவும், புதுச்சேரியை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தவும், நீடித்து நிலைத்து இருக்கும் தொழில் வளர்ச்சியை உருவாக்கவும், விவசாயத்தைப் புனரமைக்கவும், இரண்டாவது பசுமைப் புரட்சியை உருவாக்கவும், நகர்ப்புற வளர்ச்சியினை மேம்படுத்தவும், புதுச்சேரியைச் சுற்றுலாத் தலமாக உயர்த்தவும், மனிதவளக் குறியீடுகளில் ஏற்றம் பெறவும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதியான சமூக நல அந்தஸ்து மேலோங்கிய மாநிலமாகவும், சுற்றுச் சூழல் மேம்பட்ட மாநிலமாகவும், நிதி உபரி மாநிலமாகவும், வேலை இன்மை இல்லாத மாநிலமாக உருவாக்கவும், வறுமை இல்லாத, குடிசைகள் இல்லாத, சமமான பிராந்திய வளர்ச்சியைக் கொண்ட சமூக நீதியின் சிகரமாகவும், நல்லிணக்கம் பேணும் மாநிலமாகவும் புதுச்சேரியை உருவாக்க மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய தலைமையில் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மேற்கூறிய இலக்கினை அடைவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்வரும் திட்டங்களைச் செயல்படுத்தும் என்று இந்தத் தேர்தல் அறிக்கை மூலமாக உறுதி அளிக்கிறது..

புதுச்சேரியின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், புதுச்சேரியை உள்ளடக்கிய நான்கு பிராந்திய பகுதிகளுக்கும் பாதிப்பில்லாத வகையிலும், அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி சலுகையோடு கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்.

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு தமிழகத்திற்கென்று உருவாக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டம் - 2023ஐப் போல, """"புதுச்சேரி தொலைநோக்கு திட்டம்-2030"" உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆண்டுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அவைகள் முறையே நிறைவேற்றப்படுவதுடன், அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார வளர்ச்சி பெற்று, செழுமை பெற வழிவகை செய்யப்படும்.

புதுச்சேரி அரசு நிதி சிக்கலில் இருந்து மீள்வதற்கு, தற்சமயம் இருக்கின்ற சுமார் ரூ. 6,400 கோடி ரூபாய் கடன் சுமையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு வட்டியாக செலுத்தப்பட்டு வரும் சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்படும்.

 • மற்ற மாநிலங்களில் உள்ளது போல, ஒரு மாநிலத் திட்டக் குழு (ஞடயnniபே ஊடிஅஅளைளiடிn) அமைத்தல்.
 • புதுச்சேரிக்குத் தேவைப்படக் கூடிய மனித வளத்தை நியமனம் செய்வதற்கான ஒரு பொதுப் பணியாளர் தேர்வாணையம் அமைத்தல். (ஞரனரஉhநசசல ஞரடெiஉ ளுநசஎiஉந ஊடிஅஅளைளiடிn)
 • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதுச்சேரி கிளையை உருவாக்குதல்.
 • புதுச்சேரி மாநிலப் பல்கலைக்கழகம் கொண்டு வருதல்.
 • புதுச்சேரி மின் வாரியம் (ஞரனரஉhநசசல நுடநஉவசiஉவைல க்ஷடியசன) அமைத்தல்.
 • புதுச்சேரி உயர் கல்விக் கழகம் (ஞரனரஉhநசசல ஊடிரnஉடை கடிச ழபைhநச நுனரஉயவiடிn) அமைத்தல்.
 • புதுச்சேரி மாநில இடைநிலைக் கல்வி வாரியம் (ஞரனரஉhநசசல ளுவயவந க்ஷடியசன கடிச ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) அமைத்தல்.
 • மாநில மருத்துவ மற்றும் நல வளர்ச்சிக் குழு அமைத்தல்.
 • புதுச்சேரி மின்னணுக் கார்ப்பரேஷன் (ஞரனரஉhநசசல நுடநஉவசடிniஉள ஊடிசயீடிசயவiடிn) அமைத்தல்.
 • புதுச்சேரி சிறுதொழில் கார்ப்பரேஷன் (ஞரனரஉhநசசல ளுஅயடட ஐனேரளவசநைள ஊடிசயீடிசயவiடிn) அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
 • இந்திய அளவில் உருவாக்கப்படுகிற ஸ்மார்ட் சிட்டி (ளுஅயசவ ஊவைல) புதுச்சேரிக்கு கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்திற்கென்று ஐஐஆ, ஐஐகூ, ஹஐஐஆளு ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்திற்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டு, வேலை வாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்படும்.
 • காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுவதால், சுற்றுப்புறச் சூழல் பாதிக்காத வகையில் துறைமுகம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
 • புதுச்சேரி, உழவர்கரை ஆகிய இரண்டு நகராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்படும்.
 • தொழில் வளர்ச்சியினை ஊக்குவித்து, வேலை வாய்ப்பினை அதிக அளவில் உருவாக்குவதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். இதற்கென புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும். மேலும், புதுச்சேரியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள தொழிற்சாலைகளை மீண்டும் புதுச்சேரிக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ளதைப்போன்று சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகளுக்கு தொழில் தொடங்குவதற்கு, ஒற்றை சாளர முறையில் தடையில்லா சான்று மற்றும் அனுமதி வழங்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், புதுச்சேரியில் புதிய கனரக தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
 • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்க வழிவகை காணப்படும்.
 • பழமைவாய்ந்த புதுச்சேரி துறைமுகம் மத்திய அரசின் நிதி பங்களிப்போடு, அபிவிருத்தி செய்யப்படும். அதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் பெருக வழிவகை செய்யப்படும்.
 • சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படும். புதுச்சேரியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.
 • காரைக்காலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்க, கையகப்படுத்தப்பட்ட சுமார் 550 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் இதுவரை உபயோகப் படுத்தப்படவில்லை. எனவே இந்த இடத்தில் சுற்றுபுறச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் சிறிய நடுத்தர கனரக தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
 • பமாநில வருவாய் பெருக்கத்தையும், கிராமப்புறங்களின் மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு, விவசாயத்திற்கான திட்ட முதலீடு உயர்த்தப்படும். விவசாய காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும். ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படும். நீர் வள பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சொட்டு நீர் பாசனம் ஊக்குவிக்கப்படும். கரும்பு, நெல் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும். நிலத்தடி நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு கரைகள் பலபடுத்தப்படும். ஆற்றுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். மழை நீர் சேகரிப்பு புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் கட்டாயமாக்கப்படும்.
 • தமிழகத்தைப் போல, வாழ்நாள் முழுவதும் விவசாய குடும்பங்களை பாதுகாக்கின்ற உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • புதுச்சேரி மக்களின், பால் தேவையினை கருத்திற்கொண்டும், ஏழை எளியோரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கிலும் தமிழகத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்குவதை போல் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தேவையான அனைத்து இடங்களிலும், மேம்பாலங்கள் கட்டப்படும். இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, அண்ணா சதுக்கம், காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட தேவையான அனைத்து இடங்களிலும் மேம்பாலங்கள் கொண்டு வரப்படும்.
 • புதுச்சேரியை சுற்றி சுற்றுவட்டச்சாலை உருவாக்கப்படும். மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
 • புதுச்சேரி மக்களின், நீண்ட கால கோரிக்கையான சென்னை, புதுச்சேரி வழியாக கடலூர் வரையிலும், அதே போன்று புதுச்சேரியிலிருந்து கடலூர் வரை உடனடியாக இரயில் பாதை திட்டம் கொண்டு வர நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
 • சென்னை கடல் மார்க்கமாக புதுச்சேரிக்கு சிறிய ரக விரைவு போக்குவரத்து பயணிகள் கப்பல் விடப்படும். அதே போன்று புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கும் பயணிகள் கப்பல் விடப்படும்.
 • முடக்கப்பட்டுள்ள விமானத் தளம் புனரமைக்கப்பட்டு, முழுமையாக இயங்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தரை வழி, நீர்வழி மற்றும் வான் வழியாக புதுச்சேரியை பிற மாநிலங்களோடு போக்குவரத்திற்காக இணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
 • காரைக்கால் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
 • புதுச்சேரி மாநிலத் தேவைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவதை தவிர்க்கும் வகையில், 400 மெகா வாட் மின்சாரம் தயாரிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
 • காரைக்காலில் செயல்படும், மின்உற்பத்தி நிலையத்தின் உற்பத்தியை 32 மெகாவாட்டில் இருந்து 60 மெகாவாட்டாக உயர்த்தப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
 • புறநகர் பகுதியான கிராமப்பகுதியில் பூமிக்கு அடியில் மின்தடம் (ஊயடெந) அமைக்கப்படும்.
 • சூரிய ஒளி மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்தில், மாணவ / மாணவியரின் நலன் காக்க தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தற்போது, மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள, அனைத்து பாடப்பிரிவிலும் 50ரூ இடத்தினை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவ / மாணவியருக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு தனி """"கல்வி வாரியம்"" அமைக்கப்படும்.
 • புதுச்சேரியில் இயங்கும், அனைத்து தனியார் மருத்துவ/ பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். மாணவர் நலன், சீரான கல்வி கட்டணங்கள், கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சீர்செய்யப்படும். மருத்துவ படிப்பு, உயர் மருத்துவ படிப்பு (ஞழு), இவை அனைத்திலும் 50ரூ அரசின் இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு பெற்றுத்தரப்படும்.
 • தமிழகத்தில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் உள்ளதை போன்று, தனியார் பள்ளி கல்வி கட்டணங்கள் முறைப்படுத்தப்படும்.
 • மாணவர்களுடைய நலன் பேணி, பாதுகாக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கல்வி தரம் உயர்த்தப்படும்.
 • தமிழக அரசு அளித்துவரும் சலுகைகளான, தனியார் கல்வி நிறுவனங்களில் 25ரூ ஒதுக்கீடு கிராமப்புற ஏழை, எளிய மாணவ/மாணவியருக்கு வழங்கப்படும்.
 • தமிழகத்தில் வழங்கப்படுவதைப் போல அனைத்து கல்வி உபகரணங்களும் விலையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ/மாணவியர் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை வழங்கப்படும்.
 • மாணவ/மாணவியர் கல்வி கற்கும் பருவத்தில், வருமானம் ஈட்டுகிற குடும்ப தலைவர் இறந்து விட்டால், அந்த மாணவ/மாணவியர் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தப்படும்.
 • ஐஹளு, ஐஞளு, போன்ற ருஞளுஊ தேர்வுகளுக்கும் மாணவ / மாணவியர்களை தயார் செய்யும் பொருட்டு, கட்டணமில்லாப் பயிற்சி அளிக்க, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
 • ஏழை, எளிய மற்றும் ஆதி திராவிட மாணவர்கள் நலனுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய உண்டு-உறைவிட பள்ளிகள் (சுநளனைநவேயைட ளுஉhடிடிட) புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நிறுவப்படும்.
 • பத்தாவது படித்த பெண்ணின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.
 • தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வளர்ச்சி வங்கியின் கிளையை புதுச்சேரியில் உருவாக்க ஏற்பாடு செய்யப்படும் . அதே போல், தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை இருந்தால் 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 25 ஆயிரம் ரூபாயும் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும்.
 • மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்படும். குழு தலைவிகளுக்கு விலையில்லா கைப்பேசி (ஊநடடயீhடிநே) வழங்கப்படும்.
 • அனைத்து சுயஉதவி குழுக்களுக்கும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3ரூ இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 • புதுச்சேரி, காரைக்காலில் உள்ள, அரசு பொது மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். கேன்சர், மூளை அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, தண்டு வட அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து உயர் சிகிச்சைகளுக்கு வெளி மாநிலத்திற்கு அனுப்பாமல் சிறப்பு வல்லுநர்களை கொண்டு புதுச்சேரி, காரைக்கால் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்.
 • அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
 • காரைக்காலில், புதுச்சேரியில் உள்ளது போன்று அரசு சார்பில் மருத்துவ கல்லூரி ஏற்படுத்தப்படும்.
 • ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் தற்போது 150 ஆக உள்ள ஆக்ஷக்ஷளு மருத்துவப் படிப்பு இடங்களை 250-ஆக உயர்த்துவதற்கும்; தற்போதுள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை அதிகரிக்கவும், அதில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 50ரூ இடஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்படும்.
 • சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஏழை குடும்பங்களுக்கு கழிப்பிட வசதிகள் மானியத்தில் நிறைவேற்றப்படும்.
 • புதுச்சேரியில், உயிரியியல் பூங்கா ஒன்று உருவாக்கப்படும். உசுட்டேரியை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும். கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளதை போன்று இசையுடன் கூடிய படகுகள் போக்குவரத்து துவக்கப்பட்டு, சுற்றுலா மேம்படுத்தப்படும்.
 • புதுச்சேரி முழுவதும், சுற்றுலாவை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். சித்தர்கள் வாழ்ந்த, புண்ணிய பூமியின் மகத்துவமும், இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டு தலங்கள் புனிதமும் பேணி காக்கப்படும்.
 • வரலாற்று சிறப்புமிக்க தாவரவியல் பூங்கா மற்றும் அரிக்கன்மேடு பகுதிகள் முழுமையான சுற்றுலா தலமாக மாற்றப்படும். கடற்கரை லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள மணல் பகுதி, அனைத்து வசதிகளுடன் கூடிய நீர் ஊற்று விளையாட்டு கடற்கரை சுற்றுலா தலமாக மாற்றப்படும்.
 • மேலும், ஆன்மீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் கல்விச்சுற்றுலா மீது அரசு தனி கவனம் செலுத்தும்.
 • இந்துக்கள் புனித பயணம் மேற்கொள்ளும், மானசரோவர் மற்றும் முக்திநாத் சென்று வரவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் மானியம் வழங்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
 • திருநள்ளாறு கோயில் நகர அபிவிருத்தி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். அங்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மேலும், பக்தர்கள் வந்து தங்கி செல்வதற்கு """"யாத்ரி நிவாஸ்"" (பக்தர்கள் தங்கும் விடுதி) அமைக்கப்படும்.
 • பிரசித்திபெற்ற திருக்கோயில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும்.
 • தமிழகத்தைப் போன்று, புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், பண்னை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடி, அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும்.
 • அதே போல், திருத்திய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ரூ.4 இலட்சம் வழங்கப்படும்.
 • பொது விநியோகத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 20 கிலோ விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்றவை வழங்கப்படும்.
 • இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்ட மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்படும்.
 • காரைக்கால் கடற்கரையோரம் கடல் அரிப்பிலிருந்து , மீனவ கிராமங்களை பாதுகாக்க கருங்கல் தடுப்புச் சுவர் உடனடியாக அமைக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆங்காங்கே தூண்டில் வளைவு அமைத்து கடல் அரிப்பு தடுக்கப்படும்.
 • மாஹே, ஏனாம் கடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்டு மீனவர் நலன் பாதுகாக்கப்படும்.
 • புதுச்சேரி பகுதியில் உள்ள சுண்ணாம்பு ஆறு, அரியாங்குப்பம் ஆறு, காரைக்காலில் உள்ள அரசலாறு, ஆகிய ஆறுகள் ஆழப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தி மீன்பிடிக்க உகந்தவாறு சீர் செய்யப்படும்.
 • சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள, மக்களுக்கு தேவையான குடியிருப்புகள் கட்டித்தரப்படும். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும்.
 • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடாக ஒதுக்கப்படும் சிறப்பு கூறு நிதி அவர்களுக்கு முழுமையாக செலவிடப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளோடு மேம்படுத்தப்படும்.
 • வீடு இல்லா அனைத்து ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கும் வீட்டுமனை வழங்கப்படும். அனைத்து ஆதி திராவிட மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பணி உயர்வு ஆகியவற்றில் உரிய இடஒதுக்கீடு, மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க உறுதி செய்யப்படும்.
 • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்; தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
 • பழங்குடியினரை (ளுகூ) அங்கீகரித்து அவர்களுக்கு உரிய 1ரூ இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 • நெசவாளர், தொழிலாளர் மற்றும் கட்டடத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலன் : நலிந்த நிலையில் உள்ள நெசவுத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் துயர் களைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி கிடைத்திடவும், அவர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை தேக்கம் இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாவு நூல் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறிக்கு என்று சில துணி ரகங்கள் ஒதுக்கப்பட்டு கைத்தறி நெசவாளர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
 • வரலாற்று சிறப்புமிக்க ரேடியர், சுதேசி, பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளில் பணிபுரிந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி முடக்கப்பட்டுள்ளதால், அத்தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இத்தொழிற்சாலைகள் புனரமைக்கப்பட்டு, தொழிலாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள்.
 • ரேடியர் மில், சுதேசி மில், பாரதி மில் ஆகிய மூன்று பஞ்சாலைகளும் நவீனபடுத்தப்பட்டு, ஆண்டுதோறும் அட்டவணை இன மக்கள், மீனவ சமுதாய மக்கள் மற்றும் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா துணிகள் மற்றும் பள்ளி சீருடைகள், செவிலியர், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைத் துணி வகைகளும் மேற்கூறிய நவீனபடுத்தப்பட்ட பஞ்சாலைகள் மூலம் வழங்கப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 6000 ஆட்டோ தொழிலாளர்களின் நலன் உரிய வகையில் பாதுகாக்கப்படும்.
 • புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கட்டிட தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலன் மற்றும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காகவும், மேம்பாட்டிற்காகவும் சட்டம் கொண்டு வரப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
 • மத்திய இளைஞர் நலத் துறையில், புதுச்சேரியில் உள்ள விளையாட்டு வீரர்கள், ரயில் சலுகை பயணச் சீட்டைப் புதுச்சேரியிலேயே பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இளைஞர்கள் நலன் மேம்பட, இளைஞர் மற்றும் மாணவர் நலத் துறை ஒன்று உருவாக்கப்பட்டு, மத்திய அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும். சுய வேலை வாய்ப்பைப் பெருக்க இத்துறையின் வல்லுநர்களைக் கொண்டு ஊக்குவிப்புப் பயிற்சி, தொழிற் பயிற்சி ஆகியவை நடத்தப்படும். இதன் வழியாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
 • மாணவ / மாணவியரின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், கொம்யூன் பஞ்சாயத்துகளில் உயர் தரத்துடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
 • தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் உள்ளதை போன்று, விளையாட்டிற்கென தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.
 • புதுச்சேரியில், சர்வதேச தரம்வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும். அதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்படுத்தப்படும். சர்வதேச போட்டிகள் நடத்தும் நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் இணைக்கப்படும்.

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையின மக்கள் நலன் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை அட்டவணை இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

 • 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். காரைக்காலில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி, புதுச்சேரியைப் போல வழங்கப்படும். புதுச்சேரியின் அரசு, பல்வேறு வகையான ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும். குறிப்பாக ஏ.சி.பி., எம்.ஏ.சி.பி., விவகாரம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
 • புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளைப் புதுச்சேரி அரசு தீர்த்து வைக்கும். பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் கூடுதலாக்கப்படும்.

புதுச்சேரி வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு, வணிகர்களின் விருப்பத்திற்கேற்ப செம்மையாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 • புதுச்சேரி மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழும் வகையிலும்; மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பாரபட்சமின்றி நேர்மையான முறையில் பாதுகாக்கப்படும்.
 • காவல்துறை, நவீன படுத்தப்பட்டு காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறையினருக்கு நவீன பயிற்சிகள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும். புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீன படுத்தப்படும்.
 • மேலும், காவலர்களின் பணிகாலத்திற்கேற்றார்போல் முறையான பணி உயர்வு வழங்கப்படும்.
 • தீயணைப்பு நிலையங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.