அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர்

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 

Mgrபிறந்த தேதி : 17.1.1917
இடம் : கண்டி (ஸ்ரீலங்கா)
கல்வி நிலை : ஆரம்ப பள்ளிக் கல்வி
குடும்பம் : திருமணமானவர்
தொழில் : நடிப்பு, திரைப்படம் இயக்குதல் மற்றும் தயாரித்தல்

அரசியல் ஈடுபாடு :
1952 ஆம் ஆண்டு தி.மு.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு, பின்னர் அக்கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பின்னர், தி.மு.க. வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். கழகம் தொடங்கி சில நாட்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கழகம் ஆட்சியைப் பிடித்தது. 1977 முதல் தான் மறையும்  வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

முதலமைச்சர்
30-06-1977 முதல் 17-02-1980 வரை
09-06-1980 முதல் 15-11-1984 வரை
10-02-1985 முதல் 24-12-1987 வரை

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர்
21.4.1962 முதல் 13.3.1964 வரை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்
1967 முதல் 1971 வரை
1971 முதல் 1976 வரை
1977 முதல் 1980 வரை
1980 முதல் 1984 வரை
1985 முதல் 1987 வரை

சிறுசேமிப்பு துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இறந்த தேதி : 24.12.1987

விருதுகள்:
1965 – சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது
1969 – சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்பேர் விருது
1971 – சிறந்த நடிகருக்கான தேசிய விருது
சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
மறைவிற்குப் பின் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

வெளிநாட்டுப் பயணங்கள் :
ஸ்ரீலங்கா, பர்மா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், பாங்காக், ரஷ்யா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பொழுதுபோக்கு: புத்தகம் படித்தல்
விளையாட்டுகள் : செஸ், குதிரையேற்றம், பூப்பந்து, கூடைப்பந்து மற்றும் கேரம் .