16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ரூ.1,132 கோடியில் 5,586 நீர் நிலைகள் தூர்வாரி சீரமைத்து, நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
12.51 லட்சம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக, ஒரு சவரன் தாலிக்கு தங்கத்துடன் ரூ. 25,000 மற்றும் ரூ.50,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
உழைக்கும் மகளிருக்கு ரூ.25000 மானியத்துடன் 2.85 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்கள் ரூ.740 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
பெண் அரசு ஊழியர் பேறுகால விடுப்பு 3 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
52.31 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 7,322 கோடி செலவில் விலை இல்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 2119 கோடி செலவில் 59.77 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூபாய் 1652 கோடியில் செயல்படுத்தப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க 3 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நியாய விலைக் கடைகளில் 2.1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்கு மாதங்களுக்கு பிழை இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே மருத்துவ வசதி கிடைக்க 2000 அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2.38 லட்சம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட தொகை ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மீனவர்களின் நலன் கருதி மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிவாரணம் 2000 ரூபாயில் இருந்து 5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன
புதியதாக 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டன
மீனவர்களின் நலன் கருதி மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிவாரணம் 2000 ரூபாயில் இருந்து 5000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன
புதியதாக 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டன
40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டன
3,32,460 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 45,77,484 மகளிருக்கு ரூபாய் 81,052 கோடி கடன் உதவி வழங்கி பெண்களின் பொருளாதார நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது
7.5% இட ஒதுக்கீடு வழங்கி அதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவித்தார்
குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏரி குளங்கள் தூர்வாரி மேம்படுத்தினார்
இறை ஏற்பாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்தார்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்றினார்.
கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது
முதலீட்டாளர் மாநாடு நடத்தி 83,837 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது
மகப்பேறு நிதியுதவி ரூபாய் 12000 இலிருந்து 18000 ஆக உயர்த்தி அறிவித்தார் புரட்சித்தமிழர் எடப்பாடியார்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரும் மரபினர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1-A, 1-B பணியிடங்களுக்கு SC/ST/MBC/BC &DNC பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35 இலிருந்து 37 ஆகவும் இதர பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 லிருந்து 32 ஆக ஆயிரம் உயர்த்தி ஆணையிட்டது எடப்பாடி யார் தலைமையிலான அம்மாவின் அரசு
விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது அதை 9 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 1,11,444 கரவை மாடுகள் மற்றும் 52,88,608 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன.
பயிர் காப்பீடு திட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளை பதிவு செய்ய வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 9 ஆயிரத்து 257 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்று தரப்பட்டது.
ரூபாய் 300 கோடி மூலதன நிதி மூலம் 6 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சேர்ந்த ஆறு லட்சம் விவசாயிகள் 25,228 பண்ணை இயந்திரங்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.