Skip to main content

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் -2024

19.04.2024 அன்று நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிச் சரித்திரம் படைத்து, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி, தமிழகத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று, மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பொன்மொழிக்கு ஏற்ப, ‘கட்டுண்டு வாழோம், பிரிவினை நாடோம், சமநிலையில் இணைவோம்’! என்கிற வெற்றிப் பிரகடனத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியேற்று, மக்கள் பணியில் தளராது பயணிக்க, பின்வரும் வாக்குறுதிகளை மக்களுக்கு பெருமகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறது.
கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்ட “தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்” தமிழ் நாடு முழுவதும் 9 மண்டலங்களுக்கு நேரில் சென்று, பல்வேறு தரப்பட்ட மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது தான் இந்தத் தேர்தல் அறிக்கை.