1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் எனும் அறிவிக்கப்படாத போர் போன்ற ஒரு சூழலில், அஇஅதிமு கழகம் பிறந்த ஆறே மாதத்தில் போட்டியிட்டு தன்னை நிலைநிறுத்த வேண்டிய மிகப்பெரும் கட்டாயத்தில் சிக்கியது. ஆறு மாத குழந்தையை வீழ்த்த, அரைநூற்றாண்டு கட்சியான மத்தியில் ஆளும் காங்கிரசும், கால் நூற்றாண்டு கட்சியான மாநிலத்தை ஆளும் திமுகவும் செய்த பகீதர பிரயத்தனங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக வீழ்த்திக்காட்டியது கழகம். ஆளும் திமுக மூன்றாம் இடம் சென்றது. எம்ஜிஆர் இல்லாத திமுக, உயிரில்லாத உடலாகிப்போனது வரலாறு.