1989 நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் இரண்டாக பிளவுற்றதால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள், மீண்டும் கழகத்தை ஒன்றாக்கி, சட்டமன்ற தேர்தல் திமுக வென்று ஆட்சியமைத்த ஆறே மாதங்களில் நடைபெற்ற மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்கு செல்லாமலே கழகம் இரு தொகுதிகளிலும் வென்று மீட்டெடுத்தது.