கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச் சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் அறிவித்ததற்கிணங்க, (6.8.2024 செவ்வாய் கிழமை), கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன், கேரள மாநில மின்துறை அமைச்சர் மாண்புமிகு K. கிருஷ்ணன்குட்டி ஆகியோரை, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., கூடலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன். ஜெயசீலன், கேரள மாநிலக் கழகச் செயலாளர் திரு. G. சோபகுமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் திரு. A. நாசர் ஆகியோர் நேரில் சந்தித்து, கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள். அதற்கு, கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.