அருந்ததியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டு வழக்கின் சிறப்புக் குழுவை அமைத்து, சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து 10 ஆண்டுகாலம் வழக்கு நடத்தி வெற்றி பெறச் செய்தமைக்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (6.8.2024 – செவ்வாய் கிழமை), அருந்ததியர் சமுதாய மக்களின் சார்பில், ஆதித் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஆ. நாகராசன், தமிழ் நாடு அருந்ததியர் சமுதாய மகா சபை தலைவர் திரு. உக்கடம் நாகேந்திரன், தேசிய ஒண்டிவீரன் பேரவை நிறுவனத் தலைவர் திரு. வே. இராமச்சந்திரன், புரட்சிப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு. மதுரை திலீபன், அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவர் திரு. N.T.R. மாதிகா, தமிழக மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. செ. வெள்ளிமலை, தலித் மக்கள் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. முனுசாமி, அருந்ததியர் மக்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் டாக்டர் குருவை கு. குமார், தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. A. மருதாசலம், செக்கிலியர் அருந்ததியர் உட்பிரிவுகள் தனி உள் இடஒதுக்கீடு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. K. சின்னைய்யா, தமிழக அருந்ததியர் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் திரு. A.K. ராம்குமார், ஆதித் தமிழர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. M. சக்திவேல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வின்போது, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்களும்
உடன் இருந்தார்.