அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் அறிவிக்கப்பட்ட, வர்த்தக அணிச் செயலாளரும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளருமான திரு. V.N.P. வெங்கட்ராமன், Ex. M.L.A., அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000-த்திற்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. காஞ்சி பன்னீர்செல்வம், Ex. M.L.A., சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.P. கந்தன், Ex. M.L.A., கழக மாணவர் அணி துணைச் செயலாளர் திரு. கோவிலம்பாக்கம் C. மணிமாறன் ஆகியோரும் உடன் இருந்தனர்.